search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி அனந்தன்"

    • வானொலி என்றிருந்ததை ஆகாஷ்வாணி என்று பெயர் மாற்ற முனைந்தபோது நாங்களெல்லாம் அறப்போராட்டம் நடத்திச்சென்றோம்.
    • வானொலி என்று அழைத்ததை இப்போது ஆகாஷ்வாணி என அழைக்க நினைப்பது நியாயமல்ல.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்பு வானொலி என்றிருந்ததை ஆகாஷ்வாணி என்று பெயர் மாற்ற முனைந்தபோது நாங்களெல்லாம் அறப்போராட்டம் நடத்திச்சென்றோம். சாத்தூர் வைப்பாற்றின் மணல் திடலிலே குன்றக்குடி அடிகளார், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரை அழைத்து, பெரிய மாநாடு நடத்தி வானொலி என்றே இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

    அப்போது அதை ஏற்று வானொலி என்று அழைத்ததை இப்போது ஆகாஷ்வாணி என அழைக்க நினைப்பது நியாயமல்ல. வானொலி என்றே தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குமரி அனந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • குமரி அனந்தன் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான குமரி அனந்தன் (வயது 90) சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    டாக்டர்கள் குழுவினர், குமரி அனந்தனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து, மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.

    • பெருந்தலைவர் காமராஜர் சீடராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவராகவும், மக்கள் நலனுக்காகவும் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.
    • தமிழுக்கும் தமிழ் பெருமைக்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்தவர்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி அரிகிருஷ்ணன்-தங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் குமரி ஆனந்தன்.

    பெருந்தலைவர் காமராஜர் சீடராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவராகவும், மக்கள் நலனுக்காகவும் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். இலக்கிய செல்வராகவும், மேடையில் தன் இலக்கிய நயம் மிக்க பேச்சால் மக்களை கவர்ந்தவர். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவராகவும் பணியாற்றியவர்.

    தமிழுக்கும் தமிழ் பெருமைக்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்தவர். தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் அவரது கோரிக்கையை முதல்வர் ஏற்று அண்ணாநகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி குமரி ஆனந்தனுக்கு பெருமை சேர்த்தார்.

    தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் டாக்டர் கலைஞர் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து உயிர் மூச்சாய் கடைசி காலம் முதல் பெருமை சேர்த்தாரோ, அதேபோன்று முதல்வரும் தமிழுக்கு பெருமை சேர்த்தது போல இலக்கிய செல்வருக்கு வீடு வழங்கும் அரசாணை பிறப்பித்து சிறப்பு சேர்த்துள்ளார். முதல்வருக்கு சமத்துவ மக்கள் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர்-காங்கிரசுப் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர், ஓய்வறியாத உயரியத் தொண்டர் குமரி அனந்தன்.
    • நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர்.

    சென்னை:

    குமரி அனந்தன், கன்னியா குமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர். பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர்-காங்கிரசுப் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர், ஓய்வறியாத உயரியத் தொண்டர், மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டதோடு, இலக்கியச் செல்வராகவும், மேடை மன்னராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிர்பவர் அன்பில் சிறந்த குமரி அனந்தன் அவர்கள். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர்.

    தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், அவரது கோரிக்கையினைக் கனிவுடன் ஏற்று, அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்து உள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கியச் செல்வர் குமரி அனந்தனிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார் எஸ். மக்வானா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் தங்கியிருந்த நிலையில் இரவு எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
    • குமரி அனந்தன் தலையில் இடது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    திருவட்டார்:

    தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தெலுங்கானா மற்றும் பாண்டிசேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரிஅனந்தன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்திற்கு வந்தார். அங்கு கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் குமரி அனந்தன் தலையில் இடது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவரின் உதவியாளர் மீட்டு, சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் மூன்று தையல் போடப்பட்டது.

    பின்னர் நேற்று காலை வரை அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்த குமரி அனந்தன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரை அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    ×